அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் அடையாள அட்டையைக் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர், அனைத்துத் துறை முதன்மைச் செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் உயர்நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி அரசுப் பணியாளர்கள் அனைவரும் பணிநேரத்தில் கட்டாயமாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பணிநேரத்தில் அடையாள அட்டை அணியாதவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்திருப்பதை அந்தந்தத் துறைச் செயலாளர்களும் மாவட்ட ஆட்சியர்களும் உறுதிசெய்ய வேண்டும் எனச் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.