கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் அமைய உள்ளதாக அமைச்சர் எம்.சி சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை, கடலூர் பேருந்து நிலையத்தில் அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கடலூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட, வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், குறிஞ்சிப்பாடியில் அமைய உள்ள பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தால், 5,000 பேர் நேரடியாகவும் 20,000 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுவர் எனவும் பேசினார்.