ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட 102 பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல், வரும் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், ஒன்றியக் குழு துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான 102 இடங்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்ததை மாநில தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு, மார்ச் 4ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.