தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணைக்கு ரஜினிகாந்த் இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் வேறு ஒரு நாளில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும் என ஆணைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக தெரிவித்த கருத்து குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் விசாரிக்க ஆணையம் சம்மன் அனுப்பியது. படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு தர ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்த நிலையில், தூத்துக்குடியில் விசாரணை ஆணையம் முன்பாக அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி விளக்கமளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் முருகன், கேள்விகள் அடங்கிய பேப்பர் ஒன்றை வழக்கறிஞர் மூலம் ரஜினிகாந்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அதற்கான விளக்கத்தையடுத்து மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்றும் கூறினார்.