சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதால் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் காந்தியம்மாள் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை, புதுதாமரைப்பட்டி சாலைகளில் மாடுகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பற்ற முறையில் கால்நடைகளை சாலையில் விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமெனவும், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பதில்மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.