ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மருத்துவ மாணவர், அங்கு அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியுள்ளார்.
அந்த இளைஞர், சீனாவிலுள்ள கல்லூரி ஒன்றில் மருத்துவம் பயின்று வந்தார். கடந்த 15ஆம் தேதி விமானம் மூலம் இந்தியா வந்தவருக்கு 21ஆம் தேதி சளித் தொல்லை ஏற்பட்டுள்ளது.
பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்ட அவர், 22ஆம் தேதி மாலை சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியுள்ளார்.
போலீசார் விசாரணையில், அரசு மருத்துவனையின் பராமரிக்கப்படாத கழிவறை, படுக்கைகள் தனக்குப் பிடிக்கவில்லை என்பதால் வெளியேறியதாக அவர் கூறியுள்ளார். அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு சென்றுள்ள நிலையில், வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.