விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கால்நடைகள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சே கவுண்டன் புதூரில் சமுதாய நல கூடத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இத்தகவலை கூறினார்.
முன்னதாக ஜமீன் கோட்டாம்பட்டியில் 585 ஏழை பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.