கடந்த 5ஆண்டுகளில் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண்ரெட்டி தெரிவித்தார்.
திருவள்ளூர் அருகே கீழச்சேரி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நாடு முழுவதும் 28 ஆயிரத்து 690 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில், ஒன்றரை கோடி இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், கூறியிருக்கிறார்.