தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் நிலைக்கான பணிகள் விரைவில் துவங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் சிவந்தி ஆதித்தனாருக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையில் 52 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் 260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், பல்வேறு துறைகளுக்கான 72 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களையும் திறந்துவைத்தார்.