புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடங்கள் கட்ட ரூபாய் 162 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் அறிவித்தபடி 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை விளாங்குறிச்சியில் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலும், திருச்சி நாவல்பட்டில் ரூபாய் 48 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவிலும் தகவல் தொழில்நுட்ப கட்டிடங்கள் கட்ட எல்காட் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், கட்டிடப்பணிகளை மேற்கொள்ளும் பொதுப்பணித்துறை, அதிக உயரம் கொண்ட இந்த கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சூரியசக்தி மின் வசதிகளுடன் கூடிய பசுமை கட்டிடங்களாக கட்டவும் அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்துள்ளது.