நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்த முக்கிய இடைத்தரகரை ஆறு நாட்கள் காவலில் எடுத்து தேனி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவன், அவரது தந்தையும் மருத்துவருமான வெங்கடேசன் ஆகியோரை முதலில் கைது செய்த சிபிசிஐடி போலீசார், அதன் பின்னர் ஆறு மாணவர்கள் மற்றும் இரண்டு இடைத்தரகர் என மொத்தம் 14 பேரை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் முக்கிய நபராக கருதப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இடைத்தரகர் வேதாச்சலம் என்பவர் அண்மையில் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை மருந்தாளுநரான இவரை நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆறு நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.