குரூப் 2 ஏ முறைகேட்டில் 6 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார் அரசு ஊழியர் ஒம்காந்தன் ஆகியோரை மதுரை மற்றும் ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இருவரும் சேர்ந்து எத்தனை பேரிடம் பணம் பெற்று முறைகேடாக அரசு பணியில் சேர்த்தனர் என விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகள் தொடர்பாக ஜெயக்குமாரின் கூட்டாளியான கார்த்திகேயன், இடைத் தரகரான சம்பத் ஆகியோர் ஆலந்தூர் நீதிமன்றத்திலும் துறையூரை சேர்ந்த தமிழாசிரியர் செல்வேந்திரன் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்திலும் தேர்வரான கொளத்தூரைச் சேர்ந்த பிரபாகரன் எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. நீதிமன்றத்திலும் ஏற்கனவே சரணடைந்தனர். நான்கு பேரையும் 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.