செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் உயிரிழப்பு..நடந்தது என்ன..?

Feb 20, 2020 07:28:38 PM

இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் உயிரிழக்க காரணமான கிரேன் விபத்து எப்படி நேர்ந்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியன்-2 படப்பிடிப்பு, இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றிரவு சண்டைக் காட்சியை படமாக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 20க்கு20 ஃபிரேமில் பிரமாண்ட லைட்டிங்ஸ் அமைப்பை சுமார் 45 அடி உயரத்தில் தாங்கிப் பிடித்தபடி கிரேன் நிறுத்தப்பட்டுள்ளது.

கிரேனின் சக்கரங்கள் லாக் செய்யப்பட்டிருந்த நிலையில், அதை விடுவிக்காமல் ஆபரேட்டர் ராஜன் கிரேனை இயக்கியபோது பெரும் அதிர்வு ஏற்பட்டு கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிக்கியே, சங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் டைரக்சன் உதவியாளர் மது, புரடக்சன் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதில், சங்கரின் உதவியாளரான 34 வயது நிரம்பிய கிருஷ்ணா, பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் ஆவார். விஸ்வரூபம், 2.ஓ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இதேபோல ஆந்திராவை சேர்ந்தவரும், 27 வயது இளைஞருமான மது, பல படங்களில் ஆர்ட் டைரக்சன் உதவியாளராக பணியாற்றியவர். விபத்தில் உயிரிழந்த மற்றொரு நபரான சந்திரன், தென்னிந்திய திரைப்பட மற்றும் டிவி தயாரிப்பு உதவியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர். 58 வயதான அவர், புரடக்சன் உதவியாளராக மிகுந்த அனுபவம் கொண்டவர்.

இதுபோல் திறமை வாய்ந்த இளைஞர்களும் அனுபவம் வாய்ந்த நபர்களும் எதிர்பாராத விபத்துகளில் உயிரிழப்பதற்கு, படப்பிடிப்பு தளங்களில் போதிய மற்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை என்பதே காரணம் என்று, பெயர் குறிப்பிடாத விரும்பாத ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தானியங்கி அம்சங்களை கொண்ட சீனத் தயாரிப்பு கிரேன் தற்போது அதிக அளவில் சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் அதை இயக்குவதற்கு போதிய அனுபவமில்லாத, தொழில்நுட்ப அம்சங்களை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளதாக ஆபரேட்டர்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

நன்கு பயிற்சி பெற்றவர்களை கிரேன் ஆபரேட்டர்களாக பயன்படுத்தாமல், தெரிந்தவர்கள், பழக்காமனவர்கள் என்ற பரிந்துரையின்பேரில் கிரேன் ஆபரேட்டர்கள் பணியில் அமர்த்தப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பிகில் படப்பிடிப்பின்போது, ஈவிபி படப்பிடிப்பு தளத்தில், இதே கிரேன் விபத்துக்குள்ளானதில் செல்வம் என்ற ஊழியர் காயமடைந்து, கோமா நிலையில் இருந்து பின்னர் உயிரிழந்ததையும் படப்பிடிப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்த 3 ஊழியர்களின் உடல்கள் கேஎம்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், திரைப்பட தொழிலாளர் சங்க நிர்வாகத்தின் உயர்பொறுப்புகளில் உள்ள யாரும் வந்து பார்க்கவில்லை என ஊழியர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த 3 பேரின் உடல்களுக்கு கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.

இது முதலுதவி என்றும், இனி படப்பிடிப்புகளில் ஊழியர்களுக்கு உயிர்களுக்கு உத்தரவாதம் அளிப்பதே சிகிச்சையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கோடிகளில் புரளும் தொழிலில் கடைக்கோடி ஊழியருக்கு பாதுகாப்பில்லை என்பது, திரைத்துறைக்கு அவமானம் என்றும் கமல்ஹாசன் கூறினார்.

சம்பவம் நடைபெற்றபோது, கிரேன் விபத்து 4 நிமிடங்களுக்கு முன்னதாக நிகழ்ந்திருந்தால் தானும் மார்ச்சுவரியில்தான் இருந்திருக்க நேரிட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

லண்டனில் இருந்து வந்த லைக்கா நிறுவனர் சுபாஷ்கரண் அல்லிராஜா, இயக்குநர் சங்கர் ஆகியோரும் உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். 


Advertisement
வேளாண்துறை அதிகாரிகளை சிறைபிடித்த கல்குவாரி ஊழியர்கள்.!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு.!
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிகளை மதுரையில் நடத்த ஆலோசனை - அமைச்சர் மூர்த்தி
மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
கொடைக்கானல் வந்து செல்லும் பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்.. ஏன்?..

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement