உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போலி அழைப்புகளை மேற்கொண்டு நேர விரயம் செய்த, 21 தொலைபேசி எண்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
108 ஆம்புலன்ஸ் திட்டம் மூலமாக மருத்துவக்குழுவானது, நோயாளியை நேரடியாக அணுகி உரிய நேரத்தில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. ஆனால், சில சமூக விரோதிகள் 108 கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தவறான தகவல்களை அளித்து அவர்களை அலைகழிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால் பல சமயங்களில் உண்மையாக உதவி தேவைப்படுபவர்களுக்கு. நேரத்திற்கு மருத்துவ உதவி கிடைக்காமல் போகிறது. அந்த வகையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் போலியான தகவல்களை அளித்து 108 கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட, விஷமிகள் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.