ராஜீவ் கொலை வழக்கில் சிறையிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு மெத்தனத்துடன் செயலப்டுவதாக கருதுகிறேன் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், நீதிமன்ற வழக்கின் காரணமாக அமைச்சரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது என்றும், தற்போது ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பாத்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.