கருத்தடை சிகிச்சை செய்துக்கொள்ள ஆண்களும் முன்வரவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அ.தி.மு.க. உறுப்பினர் பரமசிவத்தின் கேள்விக்கு பதில் அளித்த அவர், கருத்தடைக்கு தனி துறை அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு இரண்டு லட்சம் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
ஆண்களுக்கும் கத்தியின்றி ரத்தமின்றி, எவ்வித தழும்புமின்றி, இரண்டு மணி நேரத்தில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும், 2018-ல் 80 பேருக்கும், 2019-ல் 800 பேருக்கும் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
விருப்பமுள்ள ஆண்கள் யார் வந்தாலும் கருத்தடை சிகிச்சை செய்யப்படும் என்ற அவர், கருத்தடை சிகிச்சை செய்துகொள்ள ஆண்கள் முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.