இடைநிலைக்கல்வியில் மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக அரசு வெளியிட்ட புள்ளிவிரவம் தவறு என்ற கருத்தை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்தார்.
தமிழக அரசின் புள்ளி விவரத்தில் 2016 - 17-ல் 3.7 சதவீதமாகவும், 2017 - 18-ல் 3.6 சதவீதமாகவும் உள்ளதாகவும், ஆனால் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் இது முறையே 8 மற்றும் 16 சதவீதமாக இருப்பதாகவும் தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
ஒரே ஆண்டில் 8 சதவீதம் சதவீதம் உயரக் காரணம் என்ன என்றும், தமிழக அரசு புள்ளி விவரத்தை மாற்றி கொடுக்கக் காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், மாநில அரசின் புள்ளிவிவரம்தான் சரியானது என்றும் மத்திய அரசின் புள்ளி விவரங்களில் வித்தியாசம் இருப்பதாகவும் தெரிவித்தார். முன்பு புள்ளி விவரங்கள் ஆசிரியர்கள் மூலம் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஆன் லைன் மூலமாக எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.