தமிழகம் முழுவதும் 10,024 சத்துணவு மையங்களில் அமைக்கப்படும் காய்கறித் தோட்டங்களை ஆடிப்பெருக்கு அன்று திறக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 10,024 சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள் அமைக்க 5 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சமூக நலத்துறை ஆணையர் ஆபிரஹாம் பிறப்பித்துள்ள உத்தரவில், தனியார் பங்களிப்பு மட்டுமல்லாது தோட்டக்கலை அலுவலர்களையும் பயன்படுத்தி, தோட்டங்களுக்கு நிரந்தர வேலி அமைத்து, தொடர் பராமரிப்பை மேற்கொள்ளவும், அனைத்து பணிகளையும் கோடை விடுமுறைக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.கோடை விடுமுறைக்குள் பணிகள் முடிவடைந்த உடன், ஆடிப்பெருக்கு அன்று காய்கறித் தோட்டங்களை திறக்குமாறும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.