தஞ்சாவூர் பெரிய கோயில் அறங்காவலர் மீதான முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாபாஜி ராஜா போன்ஸ்லே அறங்காவலராக உள்ள பெரிய கோயிலில் இருந்து ராஜ ராஜ சோழன் மற்றும் லோகம்மாள் தேவி சிலைகள் காணாமல் போனதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சை கோயிலின் பாரம்பரியத்தை பாபாஜி ராஜா போன்ஸ்லே காக்க தவறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, சிலைகள் காணாமல் போனது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த நீதிபதிகள், அறங்காவலர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் அது குறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்தும் என நம்புவதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.