தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த, கல்வி கட்டணத்தை விட, கூடுதலாக வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கவும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார் உறுதியானால், சம்பந்தபட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம் எதன் அடிப்படையில் வெளியிடப்பட்டது என விளக்கம் கோரி கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும், தற்போதுவரை பதில் வரவில்லை என்றும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.