தமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வரும் பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு, முதலமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர் ஆகியோர் குறித்தும், தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கபட்டது குறித்தும் அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
அதே போல் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விமர்சித்ததாகவும், ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை இன்று விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார், முதலமைச்சரை விமர்சித்தது, சிஏஏ தொடர்பாக அரசை விமர்சித்தது ஆகிய இரு வழக்குகளில் மார்ச் 4ம் தேதியும், உள்ளாட்சி துறை அமைச்சரை விமர்சித்தது தொடர்பான வழக்கில் பிப்ரவரி 24ம் தேதியும் நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.