சேலத்திலிருந்து சென்னைக்கு, மாலை நேரத்திலும் விமான சேவையை தொடர, இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக, சேலம் எம்பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சேலத்தையும், சென்னையயும் இணைக்கும் விமான சேவை, காலை மட்டுமே இருந்து வந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இனி மாலையும் வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மாலை 4 மணிக்கு சென்னையிலிருந்து சேலத்திற்கும், மீண்டும் மாலை 5.30 மணிக்கு, சேலத்திலிருந்து சென்னைக்கும், புதிய விமான சேவை, இந்த மாத இறுதிக்குள் துவங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.