சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த ஜனவரி மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் தொடர்புடைய தவுபிக், அப்துல் சமீம் ஆகியோரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே வில்சன் கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மற்றப்பட்டதை அடுத்து, அப்துல் சமீம் மற்றும் தவுபிக் மீது உபா சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும், சேலம் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.