தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை விவாதம் இன்று தொடங்குகிறது.
கடந்த 14ம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் அறிக்கையை வாசித்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் இடம் பெற்றன.இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.
காலை 10 மணிக்கு கேள்வி நேரம் முடிந்ததும், zero hour எனப்படும் நேரமில்லா நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசைக் கோரியுள்ளார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில் பல்வேறு விவாதங்களுக்குப்பின்னர், 20ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உள்ளார்.