டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், ஆவின் பால் விநியோகம் பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பால்வளத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஆவின் டேங்கர் லாரிகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி, லாரி உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பால்வளத்துறை ஆணையர் வள்ளலார், சென்னை பெருநகர பால் பண்ணைகளுக்கு தேவையானபாலை, பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியார் பால் டேங்கர்கள் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தில் தங்கு தடையின்றி பால் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg