கோவையில் பார்ட்டி நடத்தி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதிய வகை போதை பொருள் விற்பனை செய்தது தொடர்பாக கேரளாவைச்சேர்ந்த மேலும் 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு எல்.எஸ்.டி எனப்படும் போதைமருந்து தடவிய ஸ்டாம்ப் மற்றும் பல்பம் வடிவிலான போதை மருந்து ஆகிய புதிய வகை போதை பொருட்கள் விற்பனை செய்த கும்பல் பிடிபட்டது.
இதன் தொடர்ச்சியாக மயிலேறிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் என கூறி தங்கி இருந்த கேரளாவைச் சேர்ந்த பில்ஜூலால், அர்ஜூன்பிரசாத் , சாரங் ஆகிய 3 நபர்களை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து LSD அட்டை, (methamphetamine) போதை மருந்து, ஒன்னேகால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg