உணவே மருந்து என்பதே நம் முன்னோர்களின் வாக்கு. உணவை அளவுக்கு மிஞ்சியும் சாப்பிட கூடாது. உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதிலும் கூட விதிமுறைகளை கடைபிடித்து வாழ்ந்தனர் முன்னோர்கள்.
அதன் படி எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிட்டால் நன்மை மற்றும் தீமை என்பதையும் அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வாழ்ந்தனர். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் ஆரோக்கியத்தை பற்றி எல்லாம் கவலைப்படாமல், வாய்க்கு ருசியாக கிடைத்தால் போதும் என பல பதார்த்தங்களையும் ஒரே நேரத்தில் வயிறார சாப்பிட்டு வெளுத்து கட்டுகிறோம்.
பொதுவாக கீரை வகைகளை உண்பதற்கு ஏற்ற நேரம் மதியமே. பொழுது சாய்ந்த பிறகு அல்லது இரவு நேரத்தில் கீரைகளை சாப்பிட கூடாது. ஏனென்றால் கீரையில் இருக்கும் பச்சையம் மற்றும் நார் சத்துக்களை ஜீரணிக்க தேவையான நொதிகள் இரவில் நமக்கு குறைவாகவே சுரக்கும். இதனால் செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
சிலவகை உணவுகளை சேர்த்து சாப்பிட்டாலும் உடலுக்கு தீங்கு ஏற்படும். ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை கொண்ட இரு உணவுப் பொருட்களை ஒரே நேரத்தில் சாப்பிட கூடாது
பாலுடன் மீன், கீரை வகைகள் மற்றும் புளிப்பு பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலுக்கு அது நஞ்சாகும். அதே போல கோழிக்கறியுடன் தயிரயும், பால்,தயிர் மற்றும் மோருடன் வாழைப்பழங்களையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சுத்தமான தேனுடன் இறைச்சியை சேர்த்து சாப்பிட கூடாது. தேன் சாப்பிட்டவுடன் நெய் மற்றும் இனிப்பு உணவுகளை சாப்பிடக் கூடாது. இதனால் சுவாச கோளாறுகள் உண்டாக கூடும். பாலாடையை (cheese) சூடான பானங்கள், முட்டை, பழங்கள், பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்களுடன் பால் குடிப்பதை தவிர்த்தல் நலம். இது ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும்.கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களை ஒன்றாக சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உண்டாகலாம்.
முருங்கை மற்றும் பூண்டு சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொண்ட பின்னர் பால் குடிக்க கூடாது. அப்படி செய்தால் சரும ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் எனஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்து சாப்பிட கூடாது. மீன், அல்லது தேனை திப்பிலியுடன் சேர்த்து சாப்பிட கூடாது.
கிழங்கு வகைகள் மற்றும் இறைச்சி உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது. இரண்டுமே செரிமானமாக அதிக நேரம் எடுக்கும் என்பதால் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பல கோளாறுகள் ஏற்படும்.எள்ளை பசலைக் கீரையுடன் சேர்த்து சாப்பிட கூடாது. இறைச்சி உணவுகளுடன் உளுத்தம் பருப்பு, பால், துவரம் பருப்பு, முளைகட்டிய பருப்பு வகைகளை எடுத்து கொள்ள கூடாது.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg