ஆவின் ஒப்பந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் சார்பில் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
2018 ஆம் ஆண்டுடன் ஆவின் பால் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தம் முடிவடைந்தும் தற்போது வரை புதிய ஒப்பந்தம் போடாததை கண்டித்து, லாரி உரிமையாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வரும் 300-க்கும் மேற்பட்ட ஆவின் டேங்கர் லாரிகள் இயங்காது என, ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக பால் சப்ளை பாதிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், நிர்வாகத்துக்கு சொந்தமான 53 டேங்கர் லாரிகளை கொண்டு நிலைமையை சமாளிப்போம்’ என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg