மதுரையில் ஹோட்டல்களில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட 15டன் எண்ணெய்யை சேகரித்து பயோடீசல் தயாரிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனுப்பினர்.
ஹோட்டல்களிலும், சிறிய டீ கடைகளிலும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை, பலமுறை பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக ”ருக்கோ” என்னும் புதியதிட்டம் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை சேகரித்து பயோடீசல் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பி, அங்கு இந்த எண்ணெய்கள் மூலம் தயாரிக்கப்படும் பயோ டீசல் சம்மந்தப்பட்ட ஹோட்டல்களுக்கே ஜெனரேட்டர் பயன்பாட்டிற்கு திரும்பி வழங்கப்படும்.
அதன்படி முதல்கட்டமாக 222 ஹோட்டல்களில் இருந்து, 15 டன் பழைய எண்ணெய்யை பயோ-டீசல் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அதிகாரிகள் அனுப்பினர்.