தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரை வரும் திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பின்னர், சட்டப்பேரவை நடவடிக்கைகளை முடிவு செய்வது தொடர்பான அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை தினங்கள் முடிந்து வரும் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும், வருகிற 20ஆம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலுரையாற்றுவார் என்றும் தெரிவித்தார்.
11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்பான கேள்விக்கு அது குறித்து உச்சநீதிமன்றமே விளக்கம் அளித்துவிட்டதாக சபாநாயகர் தனபால் கூறினார்.