நில அளவை தொடர்பான சில பணிகளை மேற்கொள்வதற்கு, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி மறுபயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழி பட்டா மாறுதல் முறை செயல்பாட்டில் உள்ளபோதிலும், நில அளவைப் பணிகள் அதிக அளவில் நிலுவையாக உள்ள காரணத்தால் பட்டா மாறுதல் செய்வதில் நிலுவை ஏற்பட்டுள்ளது.
எனவே நில அளவைத் துறையால் பயிற்சி அளிக்கப்பட்ட, உரிமம் பெற்ற நில அளவர்களை உருவாக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இப்புதிய நில அளவர்களின் முதல் அணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
இத்துடன் நில அளவை தொடர்பான சில பணிகளை மேற்கொள்வதற்கு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி மறுபயிற்சியும் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பட்டாமாறுதல் வழங்கக் கோரும் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண வகை செய்யப்படும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.