போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன்பு ஆஜரானார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அதே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி மந்தைவெளி வீட்டுக்கு சீல் வைத்தனர். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டது.
அதன்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி ராமசந்திரமூர்த்தி முன்பு செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார்.