விழுப்புரம் மாவட்டத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ முறைகேட்டில் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஜெயக்குமார், பாலசுந்தர் ராஜ், வெங்கட்ரமணன் தவிர 3 காவலர்கள், முறைகேடாக பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், 9 தேர்வர்கள், 5 ஓட்டுனர்கள் என 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அணிலடி கிராமத்தை சேர்ந்தவர் அமல்ராஜ். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரி பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்ததார்.
இந்நிலையில் அமல்ராஜ் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செஞ்சியை அடுத்த அனந்தபுரம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த அமல்ராஜை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்.