திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மினி லாரிகள், கேஸ் டேங்கர் லாரி, 2 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாலையில் விழுப்புரம் புறவழிச்சாலை வழியே திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற மினி லாரி மீது பின்னால் அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து மோதியது. இதில் மினி லாரி தடுப்புச்சுவரை தாண்டி சென்று எதிர்திசையில் வந்த மற்றொரு மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சென்னையில் இருந்து திருச்சி சென்ற மினிலாரி மற்றும் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்ததுடன் பின்னால் வந்த ஆம்னி பேருந்தும் சேதமடைந்தது. இதில் 4 ஓட்டுநர்கள் படுகாயமடைந்த நிலையில் நீண்ட போராட்டத்துக்கு பிறகு ராட்சத கிரேன்கள் மூலம் விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.