சேலத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இரண்டு அடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநகரின் போக்குவரத்து நெரிசலைக்குறைக்கும் விதமாக சேலம் 4ரோட்டில் இருந்து புதிய பேருந்து நிலையம் , ஐந்து ரோடு, குரங்குசாவடி வரை 4.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 321 கோடி மதிப்பீட்டில் மேம் பாலம் கட்டப்பட்டு உள்ளது.
கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் இந்த மேம்பாலப்பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இதனை அடுத்து விரைந்து பணிகளை முடித்து இம்மாத இறுதிக்குள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களின் பயன்பாட்டிற்கு பாலத்தை திறந்து வைக்கவுள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். பாலம் திறக்கப்பட்டால், ஐந்து ரோடு மற்றும் 4ரோடு வழியே செல்லும் வாகனங்கள் நெரிசல் இன்றி பயணிக்க முடியும்.