காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், காரைக்கால் மாவட்டம் மற்றும் பாகூர் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
காவிரி ஆற்றின் கடைமடை பாசன பகுதியாக உள்ள காரைக்கால் மாவட்ட விவசாயத்தை மேம்படுத்தவும், நகரமயமாதலால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.