விஜயகாந்த் அறிவித்த திட்டங்களை தான் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியும், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலும் செயல்படுத்தி வருவதாக தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் 20வது ஆண்டு கொடி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 118 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவை சுற்றி சூழச்சிகளும், துரோகங்களும் நடந்து வருவதாகவும், அதனை வென்றெடுக்க விஜயகாந்த் மீண்டும் வந்து விட்டார் எனவும் கூறினார். கட்சி தொண்டர்களுக்கு கொடி நாள் வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த், பேச முடியாத காரணத்தினால் உரையை முடித்துக் கொண்டார்.