தஞ்சை மாவட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரை அடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு விவசாயிகளின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் 383 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை தவிர்த்து, வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர் உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ள 184 நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கு அரசு நிர்ணயித்தபடி நெல் கொள்முதல் நடக்கிறதா? பட்டியலில் உள்ளபடி நெல்மூட்டைகள் இருப்பு உள்ளனவா? உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தினர்.