செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில கட்டிட தொழிலாளியை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்தண்டலத்தில் எக்ஸ்ரப் எனும் 11 தளம் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள பீகாரைச் சேர்ந்த ராம்சர்மா என்பவன், அந்த வழியே பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாணவி ஒருவரை கையை பிடித்து புதருக்கு இழுத்துச் சென்றதாகவும் அப்போது அவனை தாக்கிவிட்டு மாணவி தப்பியோடியதாகவும் இதைக்கண்டு பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது ராம்சர்மா ஓடிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், தப்பியோடிய ராம்சர்மாவை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.