நில அளவை உரிமம் பெறுவதற்கான ((லைசென்ஸ் )) பயிற்சி வகுப்புகளில் பங்கெடுக்க விரும்பும் சிவில் என்ஜினியர் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களிடம் இருந்து நில அளவை மற்றும் தீர்வுத் துறை இயக்குநரகம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இதுகுறித்து சென்னையிலுள்ள நில அளவை மற்றும் தீர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிலுள்ள நில அளவை பயிற்சி நிறுவனத்தில், 3 மாதகால பயிற்சி வகுப்புகள் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் தொடங்கவுள்ளதாகவும், இதில் பங்கெடுக்க விரும்பும் தமிழக அரசு பாலிடெக்னிக் மற்றும் கல்வி நிறுவனத்தில் 3 ஆண்டுகள் டிப்ளமோ சிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள், விண்ணப்பங்களை அனுப்பலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு இணையதளத்தில் முழு விவரமும் இருப்பதாகவும், அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.