பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட மாவட்ட அமர்வு நீதிமன்றம் விசாரணையை வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த சம்வத்தில் திருநாவுக்கரசு, மணிவண்ணன், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி விசாரணைக்காக கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணையை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி ரவி உத்தரவிட்டார். மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணையை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, வழக்கை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.