ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 89 கோடி ரூபாய் அளவிற்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யபட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷ் தொடர்ந்த வழக்கு, இன்று மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு தொடர்பாக தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி, அபிராமபுரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.