பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியரின் ஜீவனபடியை முழுமையாக மறுப்பது, அரசியல் சாசனத்தின் தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கையாடல் குற்றச்சாட்டின் பேரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ஒருவர் தொடர்புடைய வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜீவனபடியை முழுமையாக மறுப்பது அரசியல் சாசனத்தின் தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் என நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். மேலும் ஜீவன படி கோரி வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர்அளித்த மனுவை ஆறு வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க நீதிபதிகள் ஆணையிட்டனர்.