Polimer News
அரசியல் சினிமா

பாதுகாப்பு வழங்குமாறு நடிகை ஊர்மிளா போலீசில் மனு

தேர்தல் பரப்புரையின்போது, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே அடிதடி மோதல் ஏற்பட்ட நிலையில், தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நடிகையும், வடக்கு மும்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஊர்மிளா மடோன்த்கர் காவல்துறையில் மனு அளித்துள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி, தான் போட்டியிடும் வடக்கு மும்பை தொகுதியில் நடிகை ஊர்மிளா, தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்குவந்த பாஜக ஆதரவாளர்கள் சிலர், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி, ஊர்மிளாவின் பரப்புரைக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியானது.

இதனை தொடர்ந்து, தனது உயிருக்கு ஆபத்துஇருப்பதால் காவல்துறை தனக்கு தக்க பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவு ஊர்மிளா மனு அளித்துள்ளார்.

Related posts

Polimer News