Polimer News
அரசியல்

நடிகர் பிரகாஷ் ராஜ் தீவிர வாக்குசேகரிப்பு

மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக களம் காணும் நடிகர் பிரகாஷ் ராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். மக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரகாஷ் ராஜ் ஆதரவு கேட்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது பேசிய பிரகாஷ் ராஜ், தாம் யாரையும் எதிர்த்து போட்டியிடவில்லை என்றும் மக்களுக்காக போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

ஜனநாயகத்தில் நல்ல தலைவரை வெற்றி பெறச் செய்தால் மக்களும் வெற்றி பெறுவர் எனக் கூறிய பிரகாஷ் ராஜ், தவறான தலைவரை தேர்வு செய்து விட்டால் மக்களும் தோற்று விடுவார்கள் என்று குறிப்பிட்டார்.

Related posts

Polimer News