Polimer News
சென்னை

சென்னையில் 62 வாக்கு பதிவு மையங்கள் பதற்றமானவை என அறிவிப்பு

சென்னையில் உள்ள வாக்கு பதிவு மையங்களில் 62 இடங்கள் பதற்றமானவை என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற இருக்கும் தேர்தலில் சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 நாடாளுமன்ற தொகுதிகளும் 2 சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளும் உள்ளன.

இந்த தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் ஆயிரத்து 707 மையங்களில், 7 ஆயிரத்து 832 வாக்குச் சாவடிகளில் 62 வாக்கு பதிவு மையங்கள் பதற்றமானவை எனவும் வட சென்னையில் அதிகபட்சமாக 45 லிருந்து 50 மையங்கள் வரை பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதற்றமான மையங்களில் ஒவ்வொரு மையத்திற்கும் தலா 4 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக  610 துணை ராணுவத்தினர் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற போலீசார் 500 பேருக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதனிடைய சென்னையில் தேர்தல் விதிகளை மீறியதாக 746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Polimer News