Polimer News
இந்தியா சற்றுமுன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா

சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டில் பத்ம விருதுகளுக்கு 112 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒரு பகுதியினருககு 11ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். இரண்டாவது கட்ட விருது வழங்கும் விழா, இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இதில், இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, ஒடிசாவில் தேநீர் விற்று குடிசைப் பகுதி சிறுவர்களுக்கான பள்ளி நடத்தும் பிரகாஷ் ராவ், நடிகர் மனோஜ் பாஜ்பேயி, மதுரை சமூக சேவகி சின்னப்பிள்ளை ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை, ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். 

Related posts

Polimer News