Polimer News
தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிட தடைக்கோரி மனு

பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களையோ அடையாளத்தையோ வெளியிடத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணையை தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.ராஜராஜன், வில்லியம் உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

Polimer News