Polimer News
சென்னை

வீடு தீப்பிடித்து எரிந்ததில் தம்பதி பலி

சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூரில் வீடு தீப்பிடித்து எரிந்ததில், தம்பதி உடல் கருகி உயிரிழந்தனர்.

ஆதனூரை சேர்ந்த ரியாஸ், தனது மனைவி தமிழ்செல்வியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இன்று அதிகாலை திடீரென அவர்களது வீட்டில் தீப்பிடித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நெருப்பை அணைத்தனர்.

கதவை உடைத்து ரியாஸ் உடலை மீட்ட போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தமிழ்செல்வியை மருத்துவமனை கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலையா அல்லது மின்கசிவு உள்ளிட்ட காரணங்களால் தீ விபத்தா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment

Polimer News