Polimer News
மாவட்டம்

செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்த விவகாரம் கைதானவர்களின் தகவலால் மேலும் 4 டன் பறிமுதல்

வேலூரில், 10 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்ததற்காக நேற்று கைது செய்யப்பட்டவர்களின் தகவலின் பேரில், இன்று, மேலும் டன் கணக்கில் செம்மரக்கடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில், நேற்று அமானுல்லா என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் செம்மரக்கடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அமானுல்லா, ஜோதீஸ்வரன், அஸ்லாம், மற்றும் மாபூப்பாஷா ஆகியோரை கைது செய்து, லாரி, இரு சக்கரவாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் விசாரனை மேற்கொண்டதில் அதே பகுதியில் மற்றொரு வீட்டின் மாடியில் மேலும் 4 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, அவைகளை போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.

பின்னர் அமானுல்லா உள்ளிட்ட 4 பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். இதுவரை, 14 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

Polimer News